கொரோனா பாதிப்பு: நூறில் இருந்து ஆயிரமாக 15 நாட்கள்

புதுடில்லி: கொரோனா பாதிப்பு 100ல் இருந்து 1000 ஆக அதிகரிக்க இந்தியாவில் 15 நாட்கள் ஆகியுள்ளது. 100ல் இருந்து 1000 ஆக அதிக நாட்கள் கொண்ட நாடுகளில் பட்டியலில் 2வது இடத்தில் இந்தியா உள்ளது.


முதலிடத்தில் ஜப்பான் உள்ளது. அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 100ல் இருந்து 1000 அடைய 29 நாட்கள் ஆகியுள்ளது. அதுவே ஆஸ்திரேலியாவில் 15 நாட்கள் ஆகியுள்ளது. பிரிட்டனிலும், அமெரிக்காவிலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தொட 9 நாட்கள் ஆகியுள்ளது. ஸ்பெயின், ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில், 7 நாட்கள் ஆனது. தென் கொரியா, இத்தாலியில் 6 நாட்களிலும், சீனா, ஈரானிலும் 5 நாட்களிலேயே, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ல் இருந்து ஆயிரத்தை தொட்டது.