புதுடில்லி: ஏப்.,15க்கு பிறகான ரயில் டிக்கெட் முன்பதிவு நிறுத்தி வைக்கப்படவே இல்லை என ரயில்வே அமைச்சகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஏப்.,14 வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், பஸ், ரயில், விமான உள்ளிட்ட அனைத்து போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டன. பயண முன்பதிவு டிக்கெட்டுகளும் ரத்து செய்யப்பட்டன. சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் ஏப்.,14ம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்து விடுமா என்ற ஆவலும் சந்தேகமும் அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. ஆனால், ஊரடங்கு மேலும் நீட்டிக்கும் திட்டம் இல்லை என்று மத்திய அரசு தரப்பில் சமீபத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஏப்.,15க்கு பிறகான ரயில் முன்பதிவு: தெளிவுப்படுத்திய ரயில்வே