பீஜிங்: அட்லாண்டிஸ் வெளியிட்ட அறிக்கை: சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் 500 நிறுவனங்கள் பட்டியலை பார்ச்சூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில், அமெரிக்காவை சேர்ந்த பெரும்பாலான நிறுவனங்கள் இடம்பெறவில்லை. இதில் ஒரு நாடு முந்தி சென்றுவிட்டது. அது எந்த நாடு என நீங்கள் யூகிக்கலாம். அது சீனா தான்.
உலகின் சிறந்த 500 நிறுவனங்கள் பட்டியலில் 129 நிறுவனங்கள் சீனாவை சேர்ந்தவை. அமெரிக்காவை சேர்ந்த 121 நிறுவனங்கள் தான் அதில் இடம்பெற்றுள்ளன. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு, 1999ல் பார்ச்சூன் இதழ் வெளியிட்ட பட்டியலில் சீனாவை சேர்ந்த 8 நிறுவனங்கள் தான் இடம்பெற்றன. தற்போது எவ்வளவு பெரிய முன்னேற்றம்.அமெரிக்க அதிபரும், அரசியல்வாதிகளும், மீடியாக்களும், தொடர்ச்சியாக, வங்கித்துறை உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் நாம் எப்படி முதலிடத்தில் இருக்கிறோம் என சொல்லி வருகின்றன.
தற்போது, உலகின் 10 மிகப்பெரிய வங்கிகள் பட்டியல் வெளியாகியுள்ளது.அந்த பட்டியல் வருமாறு:
1. சீனா தொழில் மற்றும் வர்த்தக வங்கி(ஐ.சி.பி.சி.,)
2. சீனா கன்ஸ்ட்ரக்சன் வங்கி கார்பரேசன்
3. விவசாய வங்கி
4. பேங்க் ஆப் சீன லிமிடெட்
5. பிரிட்டனை சேர்ந்த எச்.எஸ்.பி.சி. ஹோல்டிங் வங்கி
6. அமெரிக்காவின் ஜேபிமோர்கன் கேஸ்
7. பிரான்சின் பிஎன்பி பரிபாஸ் வங்கி
8. ஜப்பானின் மிட்சுபிஷி வங்கி
9. பேங்க் ஆப் அமெரிக்கா
10. பிரான்சின் கிரெடிட் அக்ரிகோல் வங்கி