பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.151 கோடி வழங்கும் ரயில்வே ஊழியர்கள்

புதுடில்லி: ரயில்வேயில் பணிபுரியும் சுமார் 13 லட்சம் ஊழியர்கள் தங்கள் ஒருநாள் சம்பளமான ரூ.151 கோடியை பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்குதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

உயிர் கொல்லியான கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பிரதமர் மோடியும், நாட்டு மக்களிடம் தாராளமாக நிதி வழங்குங்கள் என கேட்டுக் கொண்டார். இதனையடுத்து பல்வேறு தரப்பினரும், பிரதமர் நிவாரண நிதிக்கு, தங்களால் முடிந்த உதவித் தொகையை அளித்து வருகின்றனர்.


இந்நிலையில் ரயில்வேயில் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது ஒருநாள் சம்பளமான ரூ.151 கோடியை, பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். மேலும் தானும், இணை அமைச்சர் சுரேஷ் அங்காடியும் தங்களது ஒருமாத சம்பளத்தை வழங்க உள்ளதாக கோயல் கூறினார்.